NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“பரம் பொருள்” விமர்சனம்

நாயகன் அமிதாஸ் தனது தங்கையின் மருத்துவ செலவிற்காக திருடி பணம் சேர்க்கிறார். ஒரு நாள் காவல் அதிகாரியாக இருக்கும் சரத்குமாரின் வீட்டிற்கு திருட சென்று அவரிடம் மாட்டிக் கொள்கிறார்.

அமிதாஸை விசாரிக்கும் போது, பழைய காலத்து சிலை ஒன்று இருப்பதாகவும், அதை கண்டு பிடித்து கைமாற்றி விட்டால் பல கோடி ரூபாய் போகும் என்றும் சரத்குமார் தெரிந்துக் கொள்கிறார்.

அமிதாஸை வைத்தே அந்த சிலையை கண்டுபிடிக்கிறார் சரத்குமார். மேலும் அமிதாஸுக்கு பண ஆசை காண்பித்து பாட்னராக சேர்த்துக் கொள்கிறார்.

இருவரும் கூட்டு சேர்ந்து அந்த சிலையை ஒரு பெரிய தொகைக்கு பேரம் பேசுகிறார்கள். சிலையை கை மாற்றி விடும் நிலையில் எதிர்பாராத விதமாக ஒரு சண்டையில் உடைந்து போகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் பெரியதாக கவரவில்லை. பின்னணி இசையில் Scor செய்து இருக்கிறார்.

ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர். இறுதியில் யாரும் எதிர்பார்த்திராத திருப்பம் ரசிக்க வைக்கிறது.

படத்திற்கு பெரிய பலம் சரத்குமாரின் நடிப்பு காவல் அதிகாரி தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

Share:

Related Articles