NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘பர்த் மார்க்’ படத்தின் ட்ரைலர் வெளியானது

இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான, பர்த் மார்க் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த சபீர் கதாநாயகனாக நடிக்க, ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா கதாநாயகியாக நடித்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய மனைவிக்கு பழங்கால முறையில், சுகப்பிரசவம் செய்வதற்காக கிராமம் ஒன்றுக்கு கதாநாயகன் அழைத்துச் செல்ல, அங்கு நடக்கும் மர்மமான விஷயங்கள் தான் இந்த திரைப்படத்தின் கதை.

விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படம் பிப்ரவரி 23-ம் திகதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Share:

Related Articles