NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பல கோடி வீட்டை கிப்ட் ஆக தூக்கி கொடுத்த ஆலியா பட்! யாருக்குனு பாருங்க

நடிகை ஆலியா பட் ஹிந்தி சினிமாவில் முன்னனி நடிகையாக இருந்து வருகிறார். அவர் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு குழந்தை பிறந்தது.

தற்போது மீண்டும் ஆலியா பட் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஆலியா சொந்தமாக மும்பை Bandra பகுதியில் பெரிய வீட்டை வாங்கி இருக்கிறார். அவரது தயாரிப்பு நிறுவனமான Eternal Sunshine Production Pvt மூலமாக தான் அவர் வீடு வாங்கி இருக்கிறார்.

ஆலியா வாங்கிய புது அபார்ட்மெண்ட் வீட்டின் விலை 37.8 கோடி ரூபாய். இந்த 2497 சதுர அடி வீட்டுக்கு அவர் 2.26 கோடி ருபாய் ஸ்டாம்ப் டியூட்டி செலுத்தி இருக்கிறார்.

இது மட்டுமின்றி ஜுஹு பகுதியில் இரண்டு பிளாட்கள் வாங்கி அதை அவரது அக்கா ஷாஹீன் பட்டுக்கு கிப்ட் ஆக கொடுத்திருக்கிறார் அவர். அதை விலை சுமார் 7.68 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share:

Related Articles