NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாரதி கண்ணம்மாவிற்கு பின் பிரபல சீரியலில் வில்லியாக வந்த நடிகை ஃபரினா

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை “ஃபரினா”.

தொகுப்பாளினியாக பிரபலமான இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது.

தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வருகிறார். மேலும் Hot Star தளத்தில் ஒளிபரப்பாகி வரும் உப்பு புளி காரம் Web தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பின் மீண்டும் வில்லியாக நடிக்க துவங்கியுள்ளார் ஃபரினா. Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் வில்லியாக தற்போது களமிறங்கியுள்ளார். அதற்கான Promo வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles