NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிக்பாஸ் ரசிகர்களே அடுத்து 7வது சீசனிற்கு தயாரா?- வந்ததே சூப்பர் நியூஸ்

பிரம்மாண்டத்தின் உச்சமாக விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.

முதல் சீசன் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தது, ஆனால் அதற்கு பிறகு எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

கடைசியாக 6வது சீசன் முடிவுக்கு வந்தது, அந்த சீசனின் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார், ஆனால் அந்த முடிவு ரசிகர்கள் பலருக்கு பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற பலர் இப்போது சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள், சிலர் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

கொரோனா பிரச்சனைகளுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிகள் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு, ஜனவரியில் முடிவுக்கு வந்தது. தற்போது என்ன தகவல் என்றால் பிக்பாஸ் 7வது சீசன் ஜுன் மாதமே தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதற்கான வேலைகளை ஏற்கெனவே பிக்பாஸ் குழு எடுத்துவிட்டனர் என்கின்றனர்.

Share:

Related Articles