NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபல இயக்குநர் சங்கீத் சிவன் உயிரிழப்பு

மலையாள திரையுலகின் பிரபல இயக்குநர் சங்கீத் சிவன். 61 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சங்கீத் சிவன் உயிரிழந்தார்.

இயக்குநர் சங்கீத் சிவன் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோததரர் ஆவார்.

சங்கீத் சிவன் மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். 1992 ஆம் ஆண்டு இவர் இயக்கி வெளியான “யோதா” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பாலிவுட்டில் இவர் இயக்கிய முதல் படம் “சோர்.” இதில் சன்னி தியோல் கதாநாயகனாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து கியா கூல் ஹை ஹம், யாம்லா பக்லா தீவானா 2 போன்ற பல இந்தி படங்களை சங்கீத் சிவன் இயக்கியுள்ளார்.

Share:

Related Articles