பிரபல நடிகர் சைஃப்அலிகான் மீது கத்துக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்த நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சைஃப்அலிகான் மும்பை லீலாவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அங்கு அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் மீது ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.