NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரேம் ஜி மற்றும் ஸ்டீபன் செக்கரியா இணைந்து பாடிய பாடல் வெளியானது

சூது கவ்வும் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. ‘சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும்’ என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். எட்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார். மிர்ச்சி சிவாவுடன், ஹரிஷா, ராதா ரவி, கருணாகரன், எம்.எஸ் பாஸ்கர், ரகு ஆகியோர் நடித்துள்ளனர்.

சூது கவ்வும் 2 படத்தின் முதல் பாடலான ‘வீ ஆர் நாட் தி சேம்’ சில வாரங்களுக்கு முன் வெளியாகியது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான ‘மண்டைக்கு சூரு ஏறுதே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை பிரேம் ஜி, ஸ்டீபன் செக்கரியா மற்றும் கர்ணன் கணபதி இணைந்து பாடியுள்ளனர்.

ஸ்டீபன் செக்கரியா சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் பாடகர். அவர் எழுதி பாடிய உசுரையே தொலச்சேன், சகியே, விலகாதே, அடிப்பெண்ணே போன்ற பாடல்கள் யூடியூபில் மிகவும் வைரல்.

ஸ்டீபன் செக்கரியா இதற்கு முன் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி படத்தில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

Share:

Related Articles