NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புகழ்பெற்ற நடிகர் ராஜ்கபூர் நினைவு தினம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பழம்பெரும் ஹிந்தி நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான ராஜ்கபூர் நினைவு தினம் இன்று (02) அனுஷ்டிக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவுக்கு எம்ஜிஆர், சிவாஜி எப்படியோ, பொலிவுட்டுக் நடிகர் ராஜ் கபூராவார்.

10 வயதில் நடிப்பு துறையில் நுழைந்த ராஜ் கபூர், பின்னாளில் ஏராளமான கிளாஸிக் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். படப்பிடிப்புத் தளத்தில் உதவி செய்யும் பையனாக திரைப்படத் துறையில் நுழைந்த ராஜ் கபூர், தன்னுடைய 11ஆவது வயதிலேயே ‘இன்குலாப்’ என்ற படத்தில் நடித்தார்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘நீல் கமல்’ படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுக நாயகி மதுபாலாவுடன் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 24 வயதில் ஆர்.கே.பிலிம்ஸ் என்ற பெயரில் சொந்தமாக ஸ்டுடியோ தொடங்கினார். இவர் தயாரித்து, இயக்கி, நடித்து வெளிவந்த முதல் படம் ‘ஆக்’. இதில் ஜோடியாக நர்கீஸ் நடித்தார். இந்த ஜோடி இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. 1949-ல் மெஹபூப் கான் தயாரித்த ‘அந்தாஜ்’ திரைப்படம் மூலம் சிறந்த நடிகர் என்ற அந்தஸ்து பெற்றார்.

தொடர்ந்து ‘பர்சாத்’, ‘ஆவாரா’, ‘சோரி சோரி’, ‘ஜிஸ் தேஷ் மே கங்கா பஹதீ ஹை’ என பல வெற்றிப் படங்களை தயாரித்து, இயக்கி, நடித்தார். 1964இல் தனது முதல் வண்ணப்படமான ‘சங்கம்’ படத்தை தயாரித்து, இயக்கி நடித்தார். இதன் மூலம் உலகப்புகழ் பெற்ற நடிகராக உருவெடுத்தார்.

ராஜ் கபூருக்கு ரண்தீர் கபூர், ரிஷி கபூர் ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்களும் திரைத்துறையில் கோலோச்ச காரணமாக இருந்தவர் ராஜ் கபூர். 1973-ல் ரிஷி கபூரை நாயகனாக வைத்து இவர் தயாரித்து, இயக்கிய ‘பாபி’ திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட ‘பாபி’ ரிஷி கபூருக்கு என்று தனி அடையாளத்தை உருவாக்கித் தந்தது. ராஜ் கபூர் இயக்கிய இந்த திரைப்படத்தில் தான் டிம்பிள் கபாடியாவும் நடிகையாக அறிமுகமானார்.

Share:

Related Articles