NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மகாராஜா’ இந்தி ரீமேக்

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து டந்த ஜூன் 14 ஆம் திகதி வெளிவந்த மகாராஜா திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று மகுடம் சூடியுள்ளது.

இப்படம் விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமாகும். வெகு நாட்களாக விஜய் சேதுபதியைக் கதாநாயகனாகத் திரையில் அமைந்தது.

விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார்.

சிறுமியின் பாலியல் வன்கொடுமையை பற்றிப் பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மக்களை ஆட்டிப்படைக்கிறது.

திரையரங்குகளைத் தொடர்ந்து கடந்த கடந்த ஜூலை 12 ஆம் திகதி நெட்பிலிகஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் மகாராஜா திரைப்படம் வெளியாகியது.

ஒரு சாதாரண கதையை நிதிலன் அவரது நான் லீனியர் திரைக்கதை யுக்தியால் படத்தை மிகமிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார்.

சிறுமியின் பாலியல் வன்கொடுமையை பற்றிப் பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் மக்களை ஆட்டிப்படைக்கிறது. திரையரங்குகளைத்

தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் திகதி நெட்பிலிகஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் மகாராஜா திரைப்படம் வெளியாகியது.

இந்நிலையில் மகாராஜாவை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறதாம் .

மேலும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர் கான் நடிக உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

படத்தின் இயக்குனர், மற்ற நடிகர்கள் பின்னர் முடிவு செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில் விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு இணையாக அமீர் கான் மட்டுமே பாலிவுட்டில் நடிக்க முடியும் என்று ரசிகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்

Share:

Related Articles