மலையாளத்தில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் திகதி வெளியாகி உலகளவில் 241 கோடி ரூபாய் வசூலித்து பெறும்வெற்றியை பெற்றது.
மலையாள திரையுலகில் மிகப்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது.
சமீபத்தில், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்காக தான் 7 கோடியை முதலீடு செய்திருந்ததாகவும், ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்ததாகவும்குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தற்போது வரை தனக்கு லாபத்தில் ஒரு ரூபாய் கூட பணம் அளிக்கவில்லை எனவும், முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கிடைத்த பணத்தை கருப்பு பணமாக மறைத்து வைத்துள்ளார்களா என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடந்த மாதம் இசையமைப்பாளர் இளையராஜா அவரது கண்மணி அன்போடு காதலன் பாடலை அனுமதியின்றி உபயோகித்ததாக வழக்கு தொடர்ந்தார், தற்பொழுதுஇந்த பிரச்சனையும் ஓங்கி எழுந்துள்ளது.
இந்த வழக்கிற்கு தயாரிப்பாளரான ஷான் ஆண்டனியிடம் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்பார்க்க வேண்டும்.