NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதமாற்றம் குறித்து ரெஜினா கசாண்ட்ரா Open Talk!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ரெஜினா கசாண்ட்ரா.

இவர், கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, கான்ஜூரிங் கண்ணப்பன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், நேர்காணலில் பேசிய ரெஜினா தான் மதம் மாறியது ஏன் என்பது குறித்து பேசினார்.

அதில், “என் தந்தை இஸ்லாமியர். என் அம்மா கிறிஸ்துவர். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். நான் இஸ்லாமியராகவே வளர்ந்தேன்.நான் பிறந்து 6 வருடங்களுக்கு என்ன வேறு பெயரில் அழைத்தார்கள். அதன்பின்னர் என்னுடைய பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்ததால் நான் என் தாயுடன் சென்றுவிட்டேன். என் தாய்க்கு இஸ்லாமிய மதம் பற்றி தெரியாது. அதனால் என்னை கிறிஸ்தவ மதத்தை பின்பற்ற சொன்னார். அதன்பிறகு தான் சர்ச்சில் ஞானஸ்தானம் பெற்றும் நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினேன். அப்போது தான் என் பெயர் ரெஜினா கசாண்ட்ரா என மாற்றப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share:

Related Articles