மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓய்வுபெற்ற காவலரான காமராஜ் தூக்கிட்ட நிலையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலைக்கான காரணம் குறித்து திருவான்மியூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னத்திரை நடிகை சித்ர, கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் பூந்தமல்லி அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நசரத்பேட்டை பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது சித்ராவின் குடும்பத்தினர், தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகாரளித்ததோடு சித்ராவின் கணவரான ஹேம்நாத் மீது குற்றம் சாட்டினர்.
அதனால் நசரத்பேட்டை பொலிஸார், ஹேம்நாத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்த ஹேம்நாத், பிணையில் வெளியில் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.