NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“மாமன்னன்” படத்தை குறித்து Super Starன் விமர்சனம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, Fahath Fazil கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் June 29 திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், “மாமன்னன்” திரைப்படத்தை பார்த்த Super Star ரஜினிகாந்த் அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டி தனது Twitter பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் ‘மாமன்னன்’ திரைப்படம் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, Fahath Fazil ஆகியோருக்கு எனது வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles