NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘மாமன்னன்’ படத்தை பார்த்த கமல்

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘மாமன்னன்’ ப்படத்தின் ரிலீஸ் வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

இந்தப்படத்திற்கான Promotion பணிகளிலும் படக்குழு இறங்கியுள்ளது. அந்த வகையில் மாரி செல்வராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வந்த உதயநிதியின் கடைசி படமாக ‘மாமன்னன்’ உருவாகியுள்ளது.

அமைச்சராக பொறுப்பேற்ற பின் சினிமாவிலிருந்து விலகி, அரசியலில் முழுக்கவனம் செலுத்த போவதாக உதயநிதி அறிவித்தார். இதனையடுத்து கமலின் தயாரிப்பில் அவர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கி கவனம் ஈர்த்த மாரி செல்வராஜின் மூன்றாவது படைப்பாக இந்தப்படம் உருவாகியுள்ளது. ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது ”மாமன்னன்’ படத்தை கமல் பார்த்துவிட்டார். படம் பார்த்துவிட்டு என் கையை பிடித்து அவர் வாழ்த்திய போது என் உடல் நடுங்கிவிட்டது. ‘மாமன்னன்’ படத்தை உணரக்கூடியவர் அவர்.

மாமன்னன்’ படம் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்தப்படத்தில் முழுக்க முழுக்க வேறு விதமான வடிவேலுவை காண்பித்துள்ளார் மாரி செல்வராஜ். இதனாலே ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘மாமன்னன்’ படம் வரும் June 29 ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles