இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படம் தற்போது வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத்பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில்ல நடிகர் தனுஷ் மாமன்னன் படம் குறித்து படத்தின் இடைவேளை சீன் சுவாரஸ்யமாக இருக்கும் என்று Tweet செய்திருந்தார்.
அதேபோல் ரசிகர்களும் மாரி செல்வராஜ் சிறந்த படைப்பை கொடுத்து இருக்கிறார்,இன்னும் பல ஆண்டுகளுக்கு இப்படம் பேசும் என பல நல்ல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
வடிவேலுவின் நடிப்பை காண விரும்புபவர்களுக்கு நல்ல வேட்டைதான்.
படம் முழுக்க வரும் வடிவேலுவின் கதாபாத்திரமும், வில்லனாக வரும் பஹத் பாசிலின் கதாபாத்திரமும் ரசிகர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்க வைக்கிறது.
பஹத் பாசில் யாருடைய குறியீடாக நிற்கிறார் என்கிற கேள்வி ஒவ்வொரு காட்சியிலும் வந்து செல்கிறது.
அதே போல் படத்தின் பாடல்கள் எல்லாம் அருமை.