மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, Fahath Fazil கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் June 29- திரையரங்குகளில் வெளியானது’மாமன்னன்’படம்.
இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்‘ படத்தின் இயக்குனர் ராஜூ முருகன் ‘மாமன்னன்’ திரைப்படம் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் உரிமைக்கான குரலை உயரப் பறக்க விடுகிறான் மாமன்னன்..! எப்போதும் போல மாரி செல்வராஜ் கலை நோக்கத்திற்கு கைத்தட்டலும் அன்பும். திரை சபைக்கு இந்த சபாநாயகரை அழைத்து வந்ததற்காக உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.