1979 ஆம் ஆண்டில் ”அகல்விளக்கு” எனும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகிய இவரின் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் ”கேப்டன் பிரபாகரன்”.
இது இவரின் 100 ஆவது திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் மூலமாகத்தான் ” கேப்டன்” எனும் அடைமொழி இவரை வந்து சேர்ந்தது.நாளடைவில் மக்களும் இவரை ”கேப்டன் விஜயகாந்த்” என அழைக்க ஆரம்பித்தனர்.

மன்சூர் அலிகான், ரூபினி, லிவிங்ஸ்டன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கக்கூடிய இத்திரைப்படம் திரைக்கு வந்து 34 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இத்திரைப்படத்தை 4k தரத்தாலான டிஜிட்டல் முறை மூலமாக ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது . ஆனால் திரைப்படம் ரீ- ரிலீஸ் செய்யப்படும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் இத்திரைப்படத்தோடு 2000 ஆண்டு இவரின் நடிப்பில் என்.மகாராஜன் இயக்கத்தில் வெளியான ”வல்லரசு” திரைப்படத்தினையும் படக்குழு ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
