NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் பொலிவுட்டில் தடம் பதிக்கும் தனுஷ்?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு அவரின் 50ஆவது படத்தை அவரே இயக்கி, நடிக்கவுள்ளார்.

இதில் பல திரைநட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது தனுஷ் மும்பைக்கு சென்றுள்ளார். மும்பை விமான நிலையத்தில் அவர் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் ஏற்கனவே ராஞ்சனா, ஷமிதாப், அட்ரங்கி ரே போன்ற பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இதற்கான பேச்சுவார்த்தைக்காகவே அவர் மும்பை சென்றுள்ளார் எனக் கூறப்படுகிறது.

Share:

Related Articles