NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் வருகிறது Zee தமிழ் தொலைக்கொட்சியின் “தமிழா தமிழா”

Zee தமிழ் தொலைக்கொட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவவற்பை பெற்று வந்த நிகழ்ச்சி தான்”தமிழா தமிழா”.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கரு பழனியப்பன் அவர்கள் சமீபத்தில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது புது தொகுப்பாளருடன் அடுத்த வாரம் முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.

July16 முதல் ஞாயிறு தோறும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

இது பற்றி அவரிடம் பேசும்போது, ‘நான் மக்களில் ஒருவனாக தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விரும்புகிறேன். புது முயற்சிக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறேன்’ என கூறி உள்ளார். 

Share:

Related Articles