NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணையும் அனுராக் காஷ்யப்?

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதியின் 50வது படத்தை ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். இப்படத்திற்கு மகாராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நட்டி நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் கதாநாயகன் போலவே எதிர்கதாநாயகன் கதாபாத்திரமும் வலுவானதாக இருப்பதால் அதில் முக்கிய நடிகர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்க வேண்டும் என்பதில் படக்குழு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடித்தி வருவதாகவும் விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்குமுன்பு விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் காஷ்யப் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles