NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் வெளியாகும் சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம்

இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த திரைப்படம் ‘சாகுந்தலம்’. இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்திருந்தார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் நாளை (மே 12ம் தேதி) வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. சமந்தாவின் சாகுந்தலம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் இது தொடர்பான ஹேஷ்டாக்கை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Share:

Related Articles