NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் ‘Vijay TVல் பாரதி கண்ணம்மா தொடர் “ஷெரின்”

விஜய் தொலைக்காட்சியில் பிரவீன் பென்னட் இயக்க வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தொடர் ‘பாரதி கண்ணம்மா’.

ரோஷினி மற்றும் அருண் ஜோடியாக நடிக்க தொடங்கப்பட்ட இந்த தொடரில் நடிகர்கள் பலர் வெளியேறினார்கள்.

முதல் பாகம் முடிவடைந்து இரண்டாவது பாகமும் தொடங்கப்பட்டு அதுவும் எப்போதோ முடிந்துவிட்டது.  தற்போது முதல் பாகத்தில் நடித்த நடிகை ஒருவர் மீண்டும் Vijay TV பக்கம் வந்துள்ளார். 

பாரதி கண்ணம்மா முதல் பாகத்தில் நாயகியின் தோழியாக நடித்த ஷெரின் இப்போது Vijay TV தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

எந்த தொடர் என்றால் நிறைய புதுமுகங்கள் நடிக்க கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ஆஹா கல்யாணம் தொடரில் தான் நடிக்க வந்துள்ளார்.

Share:

Related Articles