NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முதலையை கழுத்தில் அணிந்த ‘தி லெஜண்ட்’ பட நாயகி

சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. அதன்பின்னர் பெங்காலி, கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் ‘தி லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா பிரபலமடைந்தார். தற்போது போயப்பட்டி ரேப்போ, தில் அஹ்ய் கிரே, பிளாக் ரோஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிங்க் நிற உடையில் இருக்கும் ஊர்வசி கழுத்தில் அச்சு அசலாக முதலை போன்றே காட்சியளிக்கும் அணிகலனை அணிந்திருக்கிறார். இவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

Share:

Related Articles