NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முழு நேர அரசியலில் இறங்க திட்டம் – விஜய்

நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்தார்.

68-வது படமான ‘கோட்’ படத்துக்கு பிறகு இன்னொரு படத்தில் நடித்து விட்டு முழு நேர அரசியலில் இறங்குவேன் என்றும் தெரிவித்தார்.

எனவே விஜய்யின் கடைசி படமான 69-வது படத்தை இயக்குவது யார் அதில் யாரெல்லாம் நடிப்பார்கள். படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றெல்லாம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

69-வது படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் 69-வது படத்தை கைவிட விஜய் முடிவு செய்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share:

Related Articles