NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மூன்றாவது மனைவியின் தலையீட்டால் OTT’இல் நீக்கப்பட்ட ‘மல்லி பெல்லி’ படம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தமிழில் கௌரவம், அயோக்யா, கூகுள் குட்டப்பா, வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகையான பவித்ரா லோகேஷ் 63 வயது தெலுங்கு நடிகர் நரேஷை காதலித்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

பவித்ராவும், நரேசும் இணைந்து நடித்த ‘மல்லி பெல்லி’ படம் கடந்த மே மாதம் தியேட்டர்களில் வெளியானது.

இந்த படத்தில் அவர்களின் காதல் உண்மை சம்பவங்களை படமாக்கி இருந்தனர். ஆனாலும் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதையடுத்து பிரபல ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டனர்.

‘மல்லி பெல்லி’ படத்தில் தன்னை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளதாகவும், எனவே ஓ.டி.டியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி நரேசின் 3ஆவது மனைவியான ரம்யா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த சர்ச்சை காரணமாக ஓ.டி.டி தளத்தில் இருந்து ‘மல்லி பெல்லி’ படம் நீக்கப்பட்டு உள்ளது.

Share:

Related Articles