NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யுவன்-அனிருத் கூட்டனியில் முதல் பாடலை வெளியிடும் பரம்பொருள் படக்குழு

அரவிந்த்ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் "பரம்பொருள்".  இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  இப்படத்திற்கு "யுவன் சங்கர் ராஜா" இசையமைக்கிறார். 

இந்நிலையில் பரம்பொருள் படத்தின் முதல் பாடலான “அடியாத்தி” பாடல் இன்று வெளியாகும் என்று தெரிவித்து அந்த பாடலின் Kilimps வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவுடன் அனிருத் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles