NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யூடியூப் சேனல் ஆரம்பித்த இசைஞானி இளையராஜா!

பிரபல இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இவர் இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான, பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.மற்றும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இசைஞானி இளையராஜா தனது பின்னனி இசைத்தொகுப்புகளை பகிர்வதற்காக ரசிகர்களுக்கு இளையராஜா பி.ஜி .எம்ஸ் எனும் யூடியூப் சேனலினை உருவாக்கியுள்ளார்.

Share:

Related Articles