NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரஜினியை பற்றி கேள்விப்பட்டதும் ஓடோடி வந்த கமல்

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினி-கமல். இவர்கள் காலத்தில் இல்லாத ரசிகர்கள் சண்டையே கிடையாது, ஆனால் அவர்களை மிகவும் பக்குவமாக கையாண்டு இவர்களும் நண்பர்களாக வலம் வந்தார்கள்.

இப்போதும் ஒருவர் மீது ஒருவர் நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள், எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவ்வளவு நெருக்கமாக பழகுவார்கள். தற்போது இருவருமே அவரவர் படங்களில் பிஸியாக உள்ளார்கள். 

தற்போது இவர்களின் படப்பிடிப்பில் தான் ஒரு இன்ப அதிர்ச்சியான சந்திப்பு நடந்துள்ளது.

அதாவது கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் நடித்துவரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும், ரஜினியின் 170வது படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் ஒரே அரங்கில் நடந்து வந்துள்ளது.

ரஜினி, கமல்ஹாசன் இதே இடத்தில் ஷுட்டிங்கில் இருக்கிறார் என்பதை தெரிந்துகொண்டவர் நண்பரை காண செல்லலாம் என இருந்துள்ளார். 

அதேசமயம் கமல்ஹாசன் காதிலும் ரஜினி இருப்பது தெரிய வர அவர் உடனே நண்பர் இருக்கும் இடத்திற்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Share:

Related Articles