NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ராகவா லாரன்ஸ் மற்றும் கேபிஒய் பாலா அரசியல் கட்சியில் இணைவார்களா?

நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் கேபிஒய் பாலா ஆகிய இருவரும் சமூக சேவை செய்து வருகின்றனர் என்பதும் இருசக்கர வாகனங்கள் முதல் ஆட்டோ வரை பல உதவிகளை அவர்கள் இருவரும் இணைந்து செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மற்றும் கேபிஒய் பாலா ஆகியோர்களின் உதவியை ஏராளமான மக்கள் பாராட்டினாலும் ஒரு சிலர் கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதற்காக இவர்கள் இருவரும் உதவி செய்து வருகிறார்கள் என்றும் பின்னாளில் அரசியலுக்கு வர அடித்தளம் போடுகிறார்கள் என்றும் விமர்சனம் செய்தனர்.

ஆனால், தங்களை விமர்சனம் செய்பவர்களை கண்டுகொள்ளாமல் ராகவா லாரன்ஸ் மற்றும் கேபிஒய் பாலா தொடர்ந்து உதவி செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது உண்மையிலேயே ஒரு பிரபல அரசியல் கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி விஜய் சமீபத்தில் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியில் தான் இருவரும் இணைய முடிவு செய்திருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருவரது செயல்களை நடிகர் விஜய் பாராட்டிய நிலையில் அவர் இருவரையும் தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்வார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் ராகவா லாரன்ஸ் மற்றும் கேபிஒய் பாலா அரசியல் கட்சியில் இணைவார்களா? அல்லது தொடர்ந்து இதே போன்று சமூக சேவை செய்து கொண்டிருப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share:

Related Articles