NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா காதலை போட்டுடைத்த Bollywood நடிகர் ரன்பீர்

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருகிறார்கள் என நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும் அதை அவர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை.

தற்போது ராஷ்மிகா Bollywood நடிகர் ரன்பீர் ஜோடியாக ‘Animal’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர்கள் Unstoppable with NBK என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.

அந்த ஷோ முழுவதுமே நடிகர் பாலகிருஷ்ணா, ரன்பீர், இயக்குனர் சந்தீப் ரெட்டி என அனைவருமே ராஷ்மிகாவின் காதலை பற்றி தான் மறைமுகமாக கூறி கிண்டல் செய்து இருக்கின்றனர்.

விஜய் தேவேரகொண்டா வீட்டு மொட்டை மாடியில் தான் ரஷ்மிகாவை இயக்குனர் சந்தீப் ரெட்டி முதன்முதலில் பார்த்தாராம். மேலும் அர்ஜுன் ரெட்டி, அனிமல் இந்த இரண்டு படங்களில் எது அதிகம் பிடித்தது என சொல்லுங்க என கேட்டு ராஷ்மிகாவை தர்மசங்கடம் ஆக்கி இருக்கின்றனர்.

காதல் படமா இல்லை ரன்பீர் படமா? என தேர்வு செய்ய முடியாமல் ராஷ்மிகா அந்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

 மேலும் விஜய் தேவரகொண்டாவுக்கு போன் செய்ய வேண்டும் என கூறப்பட்ட போது, வேறு யாரும் பண்ணாதீங்க, ராஷ்மிகா கால் பண்ணா தான் அவர் எடுப்பார் எனவும் கலாய்த்து இருக்கின்றனர்.

Share:

Related Articles