ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. ரஜினி தன் பகுதிகளை முடித்துக்கொடுத்துவிட்டார். அதனால் விரைவில் போஸ்ட் production பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை முடித்தபிறகு ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் ஒரு ரோலில் நடிக்கிறார்.
அந்த படத்தை முடித்தபின் லைகா தயாரிப்பில் ஜெய்பீம் பட புகழ் இயக்குனர் ஞானவேல் உடன் கூட்டணி சேர்கிறார் அவர்.
ரஜினி – ஞானவேல் கூட்டணி சேரும் ரஜினி170 படத்தில் தான் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஜினி170 படத்தை முடித்தபிறகு ஞானவேல் சூர்யாவை வைத்து ஒரு புது படம் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.