வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான படம் “லக்கி பாஸ்கர்”.
இந்தப் படத்தை நாக வம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார்.
ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பிரபல Bollywood இயக்குநர் ஹன்சன் மெக்தா, தனது இயக்கத்தில் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான ஸ்கேம் தொடரின் கதைதான் லக்கி பாஸ்கர் என குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
‘நான் இயக்கி இருந்த ஸ்கேம் வெப் தொடரின் பெரும் பகுதியை தயாரிப்பாளர் நாக வம்சி லக்கி பாஸ்கர் படத்தில் பயன்படுத்தியுள்ளர். ஸ்கேம் போன்ற ஒரு இந்தி தொடரை பிற மொழிகளில் பார்ப்பதற்கு சந்தோஷமாகதான் உள்ளது’ என்றார்