NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லோகேஷின் LCU வில் இணைந்த பிரபல மலையாள நடிகர்..!!

இயக்குனர் லோகேஷுகனகராஜின் இயக்கத்திப்பில் வெளியான கைதி திரைப்படத்தினை தொடர்ந்து விக்ரம்,லியோ ஆகிய திரைப்படங்களை வெளியிட்டார். இவை அனைத்தும் ஒரே கதை கருவினை மையமாக கொண்டு வெளிவந்தன , இதனால் ”LOCASH CINEMATIC UNIVERSE” இன் திரைப்படங்கள் என அழைக்கப்பட்டது.

சமீபத்தில் இவரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கூலி திரைப்படம் உருவானது , இது எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வெளிவரவுள்ளது. இதனிடையில் ரெமோ, சுல்தான் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனின் இயக்கத்தில் பென்ஸ் திரைப்படம் உருவாகி வருகின்றது . இத்திரைப்படத்தில் ராகவா லொரென்சதான் கதாநாயகனாக நடித்துள்ளார் .இத் திரைப்பட கதையானது இயக்குனர் லோகேஷால் எழுதப்பட்டது.

மேலும் இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்திருக்கக்கூடிய இத்திரைப்படம் லோகேஷின் LCU வின் ஒரு அங்கமாக உருவாகிவருகிறது.

இத்திரைப்படத்தில் நடிகர் மாதவன் மற்றும் நிவின் பாலி முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர் . இந்நிலையில் திரைப்படத்தின் வில்லன் கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிப்பார் என அதிகம் எதிர் பார்க்கப்படுகின்றது.

Share:

Related Articles