இந்தியாவில் முதன்முதலில் கோவையில் தான் 1914-ம் ஆண்டு திரையரங்கு கட்டப்பட்டது. ‘டிலைட்’ என்று பெயரிடப்பட்ட அந்த தியேட்டரை கட்டியவர் சாமிக்கண்ணு வின்சென்ட்.
இந்த தியேட்டரில் முதன்முதலில் வள்ளி திருமணம் படம் திரையிடப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு டிலைட் திரையரங்கு புதுப்பிக்கப்பட்டு MGR . நடித்த நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட்டது.
2023-ம் ஆண்டு July மாதத்துக்கு பின் இங்கு படம் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. தென்னிந்தியாவின் முதல் தியேட்டரான டிலைட் தியேட்டரை இடிக்க உரிமையாளர்கள் முடிவு செய்தனர். அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த டிலைட் தியேட்டர் இடிக்கப்படுவது சினிமா ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது