தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளை அங்கீகரிக்கும் பணியை பல வருடங்களாக சிறப்பாக செய்துக் கொண்டு வருகிறது விகடன் சினிமா விருதுகள். இந்தாண்டுக்கான விருதுகள் இந்தாண்டுக்கான விருது விழா மே 31 ஆம் திகதி சென்னையில் நடைப்பெற்றது.
தமிழ் சினிமாவின் பல திரைப்பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் ஜிகர்தண்டா. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் ஜோடியாக நடித்திருந்தார்.
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.
இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் அடுத்த பாகமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.
இப்படம் விகடன் சினிமா விருது விழாவில் பல பிரிவுகளில் நாமினேட் ஆகிருந்தது. அதில் இப்படம் 7 விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த இயக்குனர் – கார்த்திக் சுப்பராஜ், சிறந்த நடிகை – நிமிஷா சஜயன், சிறந்த எண்டர்டெயினர் – எஸ்.ஜே சூர்யா, சிறந்த பின்னணி இசை – சந்தோஷ் நாராயணன் சிறந்த ஒப்பனை – வினோத், சிறந்த ஆடை வடிவமைப்பு – ப்ரவின் ராஜா, சிறந்த கலை இயக்குனர் – சந்தானம்
ஆகிய 7 விருதுகளையும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வென்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கார்த்திக் சுப்பராஜ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.