NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விஜய் டி.வி நிகழ்ச்சிக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு இரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்துவரும் நிலையில், தமிழ் பேச்சு எங்கள் மூச்சு பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் இட-ஒதுக்கீடு எங்கள் உரிமை என்ற தலைப்பில் நர்மதா என்பவர் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பெண்ணுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அவரது பதிவில், ‘சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான – பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி தொடங்கும்போது, பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப் பயன்படக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது’என பதிவிட்டு தனது வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Share:

Related Articles