நடிகர் அஜித் குமார் – இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.
இந்தப் படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ரிலீஸ் திகதி தள்ளி வைப்பதாக லைக்கா நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் சென்சார் விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி விடாமுயற்சி படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்று வழங்கி இருக்கிறது. இந்தப் படம் 2 மணி 30 நிமிடங்களை கொண்டுள்ளது.
இந்தப் படத்தில் இடம்பெற்று இருந்த சில வார்த்தைகள் மட்டும் மியூட் செய்யப்பட்டதாக சென்சார் சான்றிதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்தப் படம் வருகிற ஜனவரி 23 அல்லது ஜனவரி 30 ஆம் திகதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.