NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வித்யா பாலனை பற்றி இழிவாக பேசி சர்ச்சையில் மாட்டிக்கொண்ட கரீனா கபூர்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பொலிவுட் நடிகை கரீனா கபூர், நடிகை வித்யா பாலனின் தோற்றத்தை பற்றி விமர்சித்தது தற்போது பொலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கரீனா சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ளமை சர்ச்சையாக மாறியுள்ளது.

‘நீங்கள் காலையில் எழும்போது நடிகை வித்யா பாலனாக மாறிவிட்டால் எப்படி உணர்வீர்கள்’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கரீனாவின் பதில், ‘நான் வித்தியாசமாக கேவலமாக உணர்வேன்’ என்று அப்பட்டமாக பதில் ஒன்றை கூறியுள்ளார்.

மேலும் மற்றொரு தொலைக்காட்சி நேர்காணலில் மீண்டும் நடிகை வித்யா பாலனை தாக்கி கரீனா பேசியுள்ளார். அதில், ‘வுhந னுசைவல Piஉவரசந என்ற திரைப்படத்திற்காக வித்யா பாலன் அவரது உடல் எடையை இருமடங்கு அதிகரித்துக்கொண்டார், உடல் எடை அதிகமாக இருப்பது அழகு என்று அவர் நினைக்கின்றார். மேலும் தற்போது உடல் எடை அதிகரித்து கொழுகொழுவென தோற்றமளிப்பது ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆனால் நான் ஸ்லிம்மாக இருப்பதை தான் விரும்புவேன் குண்டாக மரமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

தற்போது கரீனா, நடிகை வித்யா பாலனின் தோற்றத்தை பற்றி இழிவாக பேசியது பொலிவுட் திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மேலும் கரீனாவின் இந்த சர்ச்சையான கருத்திற்கு வித்யாவின் இரசிகர்கள் அதிரடியாக கரீனாவை சமூக ஊடகங்களில் தாக்கி வருகின்றனர்.

Share:

Related Articles