NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விரைவில் இந்தியன் 3..

ஷங்கர் இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்த தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகியிருந்தது.

இத் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் இரண்டாம் பாகத்துடன் இந்தியன் 3 இன் ட்ரெய்லரும் இறுதியில் இணைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியன் 3 திரைப்படம் எப்போது என்ற கேள்விக்கு இயக்குநர் ஷங்கர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“கேம் சேஞ்சர் திரைப்படம் முடிந்துவிட்டதால் இந்தியன் 3 திரைப்படத்தின் பணிகளை தொடங்கிவிட வேண்டியதுதான்.

இப் படத்தின் பணிகளைத் தொடங்கினால் ஆறு மாதங்களில் திரைக்கு கொண்டு வந்துவிடலாம். அதில் க்ராபிக்ஸ் வேலைகள் நிறைய இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

Share:

Related Articles