NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வைரலாகும் கல்கி படத்தின் புது போஸ்டர்

நாக் அஸ்வின் இயக்கத்தில், இதிகாச கதையின் அடிப்படையில் உருவாகும் ‘கல்கி 2898 A.D’

கல்கி 2898 A.D. படத்தில் பைரவா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ். பைரவா குறித்த புது போஸ்டர் மூலம் படக்குழு சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவி்த்துள்ளார்.

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கும் கல்கி 2898 AD படம், பல மொழிகளில் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது. இது புராணக் கதைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்ஷன் கதையாகும்.

இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், கல்கி 2898 AD படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகை ஷோபனாவின் கதாபாத்திரத்தின் பெயருடன் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

தற்போது அந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. இந்தப் படம் வரும் 27-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

Share:

Related Articles