NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வைரலாகும் பிரியா அட்லீயின் லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அவர் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனாரானார்.

இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில் முதல் படத்திலேயே தடம் பதித்தார் அட்லீ.

இதை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர்களை வழங்கினார். இதை தொடர்ந்து பாலிவுட்டில் எண்டரி கொடுத்தார்.

ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் படம் கடந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது.

இந்நிலையில் இயக்குனர் அட்லீயின் காதல் மனைவியான பிரியா தனது கணவருடன் சேர்ந்து அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

Share:

Related Articles