NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஷாருக்கான் சல்மான் கான் கூட்டணியில் இப்படியொரு சம்பவமா..? பதறிய பாலிவுட்!

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் 1050 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்தப் படத்தில் சல்மான் கான் டைகர் என்ற கேமியோ ரோலில் நடித்து மிரட்டியிருந்தார்.

பாலிவுட்டின் இருபெரும் தலைகளான ஷாருக்கானும் சல்மான் கானும் இதற்கு முன்பு இணைந்து நடித்துள்ளனர். ஆனால், நீண்ட இடைவேளைக்குப் பிறகு இருவரும் ஒரு பிரம்மாண்டமான படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக பாய்காட் பிரச்சினையால் தடுமாறி வந்த பாலிவுட்டை, ஷாருக்கானின் பதான் திரைப்படம் மீட்டெடுத்தது. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் வெளியான இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் அவர்களின் ஸ்பை திரில்லர் சீரிஸாக வெளியானது.

ஷாருக்கான், சல்மான் கான் இருவரும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால், சில வருடங்களுக்கு முன்னர் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என அறிவித்தனர். அதுமட்டும் இல்லாமல் இருவருக்கும் இடையே கொஞ்சம் ஈகோ பிரச்சினையும் தலை தூக்கியது. இருவரும் போட்டிப் போட்டு ஒருவரையொருவர் தாக்கி பேசி வந்த நிலையில் தான் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருட்கள் வழக்கில் போலீஸிடம் சிக்கினான். அப்போது உடனடியாக ஷாருக்கான் வீட்டிற்கு சென்றது சல்மான் கான் தான்.

இந்த சம்பவத்தில் இருந்து மீண்டும் நண்பர்களான ஷாருக்கான் சல்மான் கான், பதான் படத்தில் கெத்து காட்டினர். இந்த கெமிஸ்ட்ரி செம்மையாக ஒர்க் அவுட் ஆனதால், அடுத்ததாக மெகா ப்ராஜக்ட்டில் களமிறங்குகின்றனர். Bang Bang, War, Pathaan என அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த சித்தார்த் ஆனந்த், இப்போது டைகர் VS பதான் படத்தையும் இயக்கவுள்ளதால், பாலிவுட் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கி, 2025ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles