NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஷாருக் கானுடன் செல்பி எடுக்க வந்த ரசிகர்! நடிகர் செய்த அதிர்ச்சி செயல்

நடிகர் ஷாருக் கான் ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட் சினிமா துறை கடந்த சில வருடங்களாக ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வந்த நிலையில் சமீபத்தில் ஷாருக் கான் நடித்த ஜவான் படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

ஷாருக் கானுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும் நிலையில் அவர் பொது இடங்களுக்கு வருகிறார் என்றால் ஈ போல ரசிகர்கள் மொய்த்துவிடுவார்கள்.

ஷாருக் கான் நேற்று மும்பை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய போது அவரை சுற்றி ஒரு கூட்டமே சேர்ந்துவிட்டது. அவரை அதிகாரிகள் பாதுகாப்பாக அழைத்து சென்று கொண்டிருக்க ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க முயற்சித்து இருக்கிறார்.

கோபத்தில் ஷாருக் கான் அந்த நபரின் போனை தட்டிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

Share:

Related Articles