NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஷ்வேதா மோகனின் பாடலை தனுஷ் வெளியிட்டார்.

பின்னணி பாடகி ஷ்வேதா மோகன் மிகவும் பிரபலமான ஒரு பாடகி. இவரை நாம் அனைவரும் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்ச்சியின் நடுவராக பார்த்திருக்கிறோம்.  சமீபத்தில் தனுஷ் நடித்த வாத்தி படத்தில் இவர் பாடிய “வா வாத்தி” எனும் பாடல் மிகவும் ஹிட்டானது.

அதை தொடர்ந்து இப்பொழுது ஷ்வேதா மோகன் மகளிர் தினத்தை முன்னிட்டு ஒரு புதிய பாடலை அவரே இசையமைத்து,பாடி உள்ளார். இப்பாடலுக்கு ‘பெண் –  ஆந்தம்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

பெண்களின் சிறப்பை போற்றும் இப்பாடலை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ” இந்த மகளிர் தினத்திற்க்கு சிறந்த சமர்ப்பணமாக இப்பாடல் இருக்கும் என்று அவர்  கூறியுள்ளார்.

Share:

Related Articles