NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹரி இயக்கத்தில் விஷால் புதிய படம் 

சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.’

விஷால் 34′ என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் அருகே இன்று நடந்தது.

இந்நிலையில், நடிகர் விஷால் படப்பிடிப்பு தளத்தில் விவசாயிகளை சந்தித்தார். அப்போது அவர்களுடன் வந்திருந்த பெண் ஒருவரை பார்த்து விஷால் சாப்டியாமா? என்று கேள்வி கேட்க அதற்கு அந்த பெண் இல்லை என்று பதிலளித்தார்.

பதற்றமடைந்த விஷால் அருகில் இருந்தவரை பார்த்து முதல்ல சாப்பாடு போடுங்க என்று காட்டமாக கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ‘உங்கள் ரசிகன் என்று சொல்ல பெருமையாக இருக்கிறது’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Share:

Related Articles