NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

100 கோடிக்கும் மேல் முன்கூட்டிய வசூலை குவித்த தி கோட் திரைப்படம்..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படம் இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பெருமளவில் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களே கிடைத்து வருவதாகவும், திரையில் படத்தைப் பார்த்துக் கொண்டாடுவதற்கான பல விஷயங்களை தி கோட் படத்தில் வெங்கட் பிரபு வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்திருக்கும் இப்படத்தின் முன்கூட்டிய பதிவுக்கான வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 100 கோடிக்கும் மேல் முன்கூட்டிய வசூலை பெற்றுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles