NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘ஸ்குவிட் கேம்’ சீசன் 3′ போஸ்டர் வெளியானது!

கடந்த 2021ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ‘ஸ்குவிட் கேம்’.

9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் – ஹியூக் இயக்கி இருந்தார்.

இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. இதனையடுத்து இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

அதன்படி, இந்தத் தொடரின் 2ஆவது பாகம் கடந்த மாதம் 26ஆம் திகதி வெளியானது. இந்நிலையில், இந்த தொடரின் 3ஆவது சீசன் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ‘ஸ்குவிட் கேம் சீசன் 3’ வெளியாகும் என்று புதிய போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Share:

Related Articles