NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

12 வருடங்களின் பின்னர் வெளியாகிறது ‘மத கஜ ராஜா’

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘மத கஜ ராஜா’ திரைப்படம் எதிர்வரும் 12ஆம் திகதி பொங்கலையொட்டி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

2013ஆம் ஆண்டு ‘மத கஜ ராஜா’ திரைப்படத்தை சுந்தர் சி இயக்கினார். எனினும் இந்த திரைப்படம் சில காரணங்களால் திரைக்கு வரவில்லை.

இப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்களான மணிவண்ணன், மனோபாலா மற்றும் மயில்சாமி எனப் பலரும் நடித்துள்ளனர். 

இந்த படத்தை விஷால் பிலிம் ஃபேக்டரி மற்றும் ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. 

விஜய் அண்டனி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த வருடம் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதையடுத்து இப்படம் கடந்த ஆண்டு ஓகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என தகவல் வெளியானது. 

இருப்பினும் படம் வெளியாகவில்லை. 

இந்த நிலையில், இப்படம் எதிர்வரும் 12ஆம் திகதி பொங்கலையொட்டி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

கிட்டத்தட்ட 12 வருட காத்திருப்புக்குப் பின் இந்த திரைப்படம் வெளியாவதால் இரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Share:

Related Articles