NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘1982 அன்பரசின் காதல்’ திரை விமர்சனம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கேரள எல்லையோரம் வசிக்கும் தமிழக இளைஞன் ஆஷிக் மெர்லினும் மலையாள பெண் சந்தனாவும் நட்புடன் பழகி வரும் நிலையில், சந்தனா மீது அஷிக் மெர்லினுக்கு காதல் வருகிறது. ஆனாலும் 3 வருடங்களாக காதலை சொல்லாமலே இருந்து வருகிறார்.

ஆஷிக் மெர்லினை சந்தனா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லும்படி கூறுகிறார். ஆஷிக் மெர்லினும் கேரளா சென்று சந்தனாவை அழைத்துக் கொண்டு மலைக்காடுகள் வழியாக பயணிக்கும்போது ரவுடிகள் மறிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பி ஓடுகின்றனர்.

உல்லாஷ் சங்கர் இருவரையும் காப்பாற்றி தனது இருப்பிடத்துக்கு அழைத்து செல்கிறார். அங்கு அவர்களை உல்லாஷ் சங்கர் முறைத்து பார்க்க பயந்து மீண்டும் தப்பி ஓடுகிறார்கள். அவர்களை விடாது உல்லாஷ் துரத்துகிறார். அவரிடம் இருவரும் சிக்கினார்களா? காதல் என்ன ஆனது? உல்லாஷ் சங்கர் யார்? என்பதே படத்தின் மீதி கதையாக உள்ளது.

ஆஷிக் மெர்லின் காதல் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்தும் இளம் காதலனாக சுறுசுறுப்பாக விளங்குகிறார். காதல் தவிப்புகளை இயல்பாக வெளிப்படுத்துகிறார். ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க காதலியை இழுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடும் காட்சி சிறப்பாக உள்ளது. சந்தனா அழகாக காட்சியளிக்கிறார். இன்னொரு நாயகனாக வரும் அமல் ரவீந்திரன் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்.

Share:

Related Articles